வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
229 total views, 1 views today