பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட் பணிக்குழுவின் அடுத்த கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், சுமார் 6 சதவீதமானோருக்கு இரண்டாவது டோஸ் இன்னும் வழங்கப்படாத நிலையில், இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதல்ல என சிலர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அதோடு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களுக்கு தடுப்பூசி அட்டை கொண்டு செல்லப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதனை இலங்கையிலும் நடை முறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக கூறியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
326 total views, 1 views today