Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeSportsவெறியை தீர்த்துக்கொண்ட இந்தியா

வெறியை தீர்த்துக்கொண்ட இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-12’ போட்டியில் அசத்திய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி-20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘சூப்பர்-12’ சுற்றுக்கான ‘குரூப்-2’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அபாரமாக ஆடிய இந்தியாவின் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்தது. இதன்மூலம் சர்வதேச ‘டி-20’ அரங்கில் அதிகமுறை 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த ஜோடி வரிசையில் 2வது இடத்தை (4 முறை) இந்தியாவின் ரோகித்-தவான், நியூசிலாந்தின் கப்டில்-வில்லியம்சன் ஜோடிகளுடன் பகிர்ந்து கொண்டது. முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம்-முகமது ரிஸ்வான் ஜோடி (5 முறை) உள்ளது.

இந்திய அணி 20 ஓவரில் 210 ரன் குவித்தது. இதன்மூலம் இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணியானது. இதற்கு முன், சார்ஜாவில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 190 ரன் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜனத் (42), அஷ்ரப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். இமாலய வெற்றியை பதிவு செய்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு தந்த இந்தியா, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 371 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular