வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களின் தகப்பனார் அல்ஹாஜ் காதர் அவர்கள் இன்று திடீர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு குறித்து அவரின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது,
எனது அன்புத் தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் காதர் அவர்கள் இன்று திடீர் சுகவீனம் காரணமாக காலமாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எனதும் குடும்பத்தினதும் முழு விடயங்களிலும் அதீத அன்பும் அக்கறையும் கொண்டு எம்மை அரவணைத்துக் கொண்டிருந்த அன்புத் தந்தையின் இழப்பின் துயரத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
என் அன்புத் தந்தையின் மஹ்பிரத்திற்காக பிரார்த்தனை புரியுமாறு உங்களை குடும்பத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறோம்.