தற்போதைய இந்திய அணிக்கு ‍ஐ.சி.சி.யின் முக்கிய ஆட்டங்களில் வெல்வதற்கான மன வலிமை இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் சர்வதேச போட்டிகளில் நாக் அவுட் ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் அரையிறுதிக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

India's chances of making the semi-finals took a body blow on Sunday

அதேநேரம் ரகிகர்களின் எதிர்பார்ப்பும் பாராட்டுக்களும் அணிக்கு வெகுமாவ குறைந்து விட்டன.

இந் நிலையிலேயே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது கெளதம் கம்பீர், இந்திய அணிக்கு திறமைகள் உள்ளது. ஆனால் ஐ.சி.சி.யின் முக்கிய ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கான மன வலிமை இல்லை என்று கூறியுள்ளார்.