2021 உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடரின் 29 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இலங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
சார்ஜாவில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியைத் தசுன் சானக்கவின் தலைமையிலான இலங்கை அணி எதிர்கொள்கின்றது.
இங்கிலாந்தில் கோடைகாலத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரினை இங்கிலாந்து அணி முழுமையாக வெற்றிக் கொண்டது.
ஆனால், தற்போது நடைபெறும் உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி தொடரில் இலங்கை அணி புதிய உத்வேகத்துடன் களம் இறங்கியுள்ளது. தென் ஆபிரிக்காவை தோற்கடிக்கவிருந்த இலங்கை அணி சில சிறிய தவறுகள் காரணமாக இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் விளையாடும் இலங்கை அணியினை இலகுவாக தோற்கடிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை இங்கிலாந்து அணி கொண்டிருக்கவில்லை. மாறாக வெற்றி பெற வேண்டும் என்ற குறிகோளுடனேயே இங்கிலாந்து அணி களம் இறங்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
207 total views, 1 views today