இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார்.

அதன்படி டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் நவம்பர் 17 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில்

இருந்து முன்னாள் இந்திய அணித் தலைவர் டிராவிட் அணியின் தலைமைப் பயிறச்சியாளராக பொறுப்பேற்பார்.

தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணத்துடன் முடிந்தவுடன் முடிவடைகிறது.

திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்.பி. சிங் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு புதன்கிழமை ஒருமனதாக ராகுல் டிராவிட்டை இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது.