நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
எனினும் அண்மைய நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை காணமுடிகின்றது.
எவ்வாறாயினும், அதற்கான காரணிகளை உடனடியாகக் கண்டறிய முடியாமலுள்ளது.
எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(04) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.
181 total views, 1 views today