நொச்சியாகம – செட்டிக்குளம் வீதியின் ஒயாமடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்துல் இருவர் காயமடைந்துள்ளனர்.

புத்தளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒயாமடுவ வீதி ஊடாக மன்னாரை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், எதிர்த்திசையில் இருந்து பயணித்த வேன் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேன் சாரதியும் அவருக்கு அருகில் இருந்து பயணம் செய்த ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஒயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.