2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே-ஆப் சுற்றின் முதலாவது ஆட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்று நிறைவடைந்தது.
லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும்.
இந் நிலையில் இன்றைய தினம் டுபாயில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நாளை சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் 13 ஆம் திகதி மோதும்.
இறுதிப்போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி டுபாயில் நடைபெறும்.
161 total views, 1 views today