2021ம் ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11ம் தேதி வரை அறிவிக்கப்படும்.
முதலில், 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் பகுதியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், டேவிட் ஜூலியஸ், நரம்பில் முனைப் பகுதியிலுள்ள வெப்பத்தை அறியும் சென்சாரை அடையாளம் கண்டுபிடிக்கும் ஆய்வில் வெற்றி பெற்றார். இதற்காக மிளகாய் மிளகு கலவையை அவர் பயன்படுத்தினார்.
ஆர்டெம் படபூட்டியன், தோல் மற்றும் உள் உறுப்புகளில் இயந்திர தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் சென்சார்கள் கண்டுபிடித்தார். இதற்காக அழுத்தம்-உணர்திறன் செல்களை அவர் பயன்படுத்தினார். இந்த கண்டுபிடிப்புகள் தீவிர ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு விதை தூவியுள்ளன.

225 total views, 1 views today