Thursday, July 7, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஹிரு ஊடக வலயமைப்புக்கு எதிராக ரிஷாட் மனு தாக்கள்

ஹிரு ஊடக வலயமைப்புக்கு எதிராக ரிஷாட் மனு தாக்கள்

ஹிரு ஊடக வலையமைப்பு உள்ளிட்ட 3 ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த நிலையான இடைக்காலத் தடை உத்தரவு கோரிய விண்ணப்பத்தைக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த மனு இன்று கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி அருண அளுத்கே முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பில் இதுவரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி மீள் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டது.

அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்த கருத்து ஒன்றை, வெளியிட்ட சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஹிரு ஊடக வலையமைப்பு உட்பட 3 ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 250 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular