Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsவேண்டுதளுக்காக நாக்கை அருத்த தி.மு.க பெண் போராளி!

வேண்டுதளுக்காக நாக்கை அருத்த தி.மு.க பெண் போராளி!

மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக நேர்ந்து கொண்ட பெண் அதன்படியே செய்து தமிழக மக்களை அதிர வைத்துள்ளார்.

பரமக்குடியை சேர்ந்தவர் 32 வயதான வனிதா, மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. மே 7ஆம் திகதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் என்ற அறிவிப்பும் வந்துவிட்டது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார்.

கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த சம்பவம் மக்களிடத்தில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

 177 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular