Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsவேகமெடுக்கும் ஒமிக்ரோன்:பல மாநிலம் முடக்கம்

வேகமெடுக்கும் ஒமிக்ரோன்:பல மாநிலம் முடக்கம்

தமிழகத்தில் கொரோன பரவலை கட்டுப்படுத்த 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவும் ஓமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.

பொங்கல் பண்டிகை இன்னும் 10 நாட்களில் கொண்டாடப்படும் நிலையில் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் கொரோன பாதிப்பு அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது. மற்ற மாநிலங்கள் போல் கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தி வந்தனர்.

லாக்டவுன் குறித்து முதல்வர் ஆலோசனை

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அது போல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது.

குழந்தைகள் காப்பகம் தவிர மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 141 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular