தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதனையடுத்து, கட்சிகளின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்று வருகிறது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
மேலும், இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் தற்போது திமுக கூட்டணி 123 இடங்களிலும், அதிமுக கூட்டணி 89 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து ஓட்டு எண்ணப்பட்டு வருகின்றன.
226 total views, 1 views today