அமைச்சு பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என அதன் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்குள் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தற்போது அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.மேலும் சிலரும் நீக்கப்படவுள்ளனர்.
நடப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரும் பொறுப்பு கூற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
267 total views, 1 views today