விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, உதய கம்மன்பில வலுசக்தி அமைச்சராகவும், விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
330 total views, 1 views today