Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவலுசக்தி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வலுசக்தி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்தல் மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் முறையிட முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை 0742 123 123 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் கிவ் ஆர் குறியீடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் நேற்று காலை 6 மணிமுதல், இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, ஆயிரத்து 108 லீற்றர் பெற்றோலும், ஆயிரத்து 441 லீற்றர் டீசலும், 9 லீற்றர் மண்ணெண்ணெயும் காவல்துறையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நேற்றைய தினம் ஞசு குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 746 நிரப்பு நிலையங்களில் இந்த முறையை அமுலாக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 மணிவரையான காலப்பகுதி வரையில் ஆயிரத்து 60 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஞசு குறியீட்டு முறைமைக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் 902 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 158 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக, இதுவரையில் 47 இலட்சத்து 96 ஆயிரத்து 28 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில், 42 இலட்சத்து 46 ஆயிரத்து 786 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

5 இலட்சத்து 49 ஆயிரத்து 388 வாகனங்கள் டீசலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களில், அதிக எண்ணிகையிலானவை உந்துருளிகளாகும்.

இதற்கமைய, 27 இலட்சத்து 84 ஆயிரத்து 762 உந்துருளிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

8 இலட்சத்து 51 ஆயிரத்து 76 முச்சக்கர வண்டிகளும், 6 இலட்சத்து 39 ஆயிரத்து 361 மகிழுந்துகளும், 2 இலட்சத்து 41 ஆயிரத்து 404 வேன்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 71 பாரவூர்திகளும், 32 ஆயிரத்து 639 பேருந்துகளும், 26 ஆயிரத்து 622 விசேட தேவை வாகனங்களும், 7 ஆயிரத்து 652 பிற வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ள

நேற்றைய நாளில், 21 இலட்சத்து 58 ஆயிரத்து 136 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த விநியோகமானது, 621 இலங்கை கனியவள கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களிலும், 125 லங்கா ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களிலும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 418 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular