Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsலிபியாவில் மோதல் - 32 பேர் பலி!

லிபியாவில் மோதல் – 32 பேர் பலி!

லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 159 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

லிபியாவில் தற்போது, உள்நாட்டு போர் நடந்து வருகிறது. உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், லிபியாவின் தலைநகர் த்ரிபோலியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில், துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், பல்வேறு கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 149 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular