இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.
எனவே, எதிர்வரும் 2 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
180 total views, 1 views today