மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 2022 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.
எனினும், நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் மாலிங்கவுடன் இணைந்தார்.
தனது கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் புதிய வீரர் சாம் பில்லிங்ஸின் விக்கெட்டைப் வீழ்த்தியதன் மூலம், பிராவோ தன்னுடைய 170 ஆவது விக்கெட்டை பெற்றார்.
தனது 151 ஆவது ஐபிஎல் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை அடைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிய லசித் மாலிங்க 122 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தித் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வந்திருந்தார்.
இம்முறை ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இணைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
லசித் மாலிங்க – 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்
ட்வெய்ன் பிராவோ – 151 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்
அமித் மிஸ்ரா – 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகள்
பியூஷ் சாவ்லா – 165 போட்டிகளில் 157 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் – 160 போட்டிகளில் 150 விக்கெட்டுகள்
217 total views, 2 views today