பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுவதாகவும் அதன் காரணமாக அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னதாக தமது வாழ்த்துக்களை தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான அவரின் முயற்சிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
298 total views, 1 views today