யுக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் பெலாரஸில் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. பெலாரஸிலுள்ள கோமெல் மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பலத்த போர் இடம்பெற்றுவரும் நிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா இணங்கியுள்ளது.
பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு வழிகோலியுள்ள காரணிகளாக கருதப்படுகின்றன.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டு பிரதிநிதிகளுகம் பெலாரஸுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இன்று பிற்பகல் ரஷ்யா – யுக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கின. 5 ஆவது நாளாக ரஷ்யா – யுக்ரைன் மோதல் இடம்பெற்றுவருகிறது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று போர் முடிவுக்கு வருமா? என உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன.
உடனடி போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய துருப்புக்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது யுக்ரைனின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி தனது நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றுவரை யுக்ரைனில் இருந்து 400,000க்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
218 total views, 1 views today