யுக்ரைனின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஹான்னா மல்யார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யாவின் 27 விமானங்கள், 26 உலங்கு வானூர்திகள், 146 கொள்கலன்கள், 706 கவச வாகனங்கள், 49 பீரங்கிகள், 2 ஆளில்லா விமானங்கள், 2 படகுகள் மற்றும் மேலும் பல இராணுவ வாகனங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல வாரங்களாக மேற்கத்திய நாடுகள் கணித்துவந்ததை ரஷ்ய அதிபர் புடின் தற்போது உண்மையாக்கி உள்ளார்.
நிலம், வான், கடல் வழியாக அண்டை நாடான யுக்ரைன் மீது படையெப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி யுக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரை தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்கான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் யுக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ரஷ்யா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உட்பட 198 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என யுக்ரைன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேலும் கூறும் போது, ‘இராணுவ தளங்கள், இராணுவ உட்கட்டமைப்பு, உளவு அமைப்புகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா இராணுவம் கூறியிருந்தது அப்பட்டமான பொய். போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்ய படைகள் யுக்ரைன் மக்களின் உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது’ என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடைநீக்கம் செய்யப்பட்டதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
முன்னதாக தற்காப்புக் கலையான ஜூடோவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் புடின். பலமான தலைவராக மட்டுமின்றி, வலிமையான மனிதராகவும் தன் இமேஜைப் பார்த்துப் கொள்பவர் புடின்.
241 total views, 1 views today