Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமொட்டுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் ஹக்கீம்

மொட்டுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் ஹக்கீம்

ஜனாதிபதி பதவிக்காக நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவர் மனோ கணேசன்  இதனை உறுதிப்படுத்தினார்.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற அடிப்படையில், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் எமது செய்திச் இதனை உறுதிப்படுத்தினார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் தமது கட்சியின் தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அதேநேரம், நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் தற்சமயம் கொழும்பில் இடம்பெறுகின்றது.

கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை ஆரம்பமானது

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இன்று மாலை 7 மணிக்கு கூடி, ஜனாதிபதி பதவிக்கான போட்டியில், எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்க உள்ளது.

அதேநேரம், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்த் குமார், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமது இந்தத் தீர்மானம் குறித்து, அவர் இன்று ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க, ஆளுந்தரப்பு சுயாதீன நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆளுந்தரப்பு சுயாதீன உறுப்பினர்கள் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது. தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படும் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவினால், வேட்பு மனுக்கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்த பதவிக்கு போட்டியிடவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான டலஸ் அலகப்பெருமவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால நலன் தொடர்பில் சிந்தித்து, தாம் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அலகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார்.

அதனை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார். அதேநேரம், அமைச்சர் தினேஸ் குணவர்தன பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்திருந்தார்.

இதனிடையே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

இந்த வேட்பாளர்கள் மூவரினதும் வேட்புமனுக்கள் 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் ஜனாதிபதி பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளதுடன், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

இவ்வாறான நிலையில், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய நாளை நடத்தப்படும் வாக்கெடுப்பை ஜனநாயத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் ஜனாதிபதியை உரிய சட்ட விதிகளுக்கு அமையத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவரை அனைத்துத் தரப்பினரும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்துக்கு அமைய வாக்களிப்புத் தொடர்பான வழிகாட்டல்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க இருப்பதாக நாளைய இரகசிய வாக்கெடுப்பின் போது தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றும் நாhளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்றத்தை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அவசர கால நிலைமை பிரகடனத்தை அன்றையதினம் அனுமதிக்காக சமர்ப்பிக்கவும் இதன்போது  தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 266 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular