Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுன்னாள் ஜனாதிபதிக்கு சகல வசதிகளும் தயார்

முன்னாள் ஜனாதிபதிக்கு சகல வசதிகளும் தயார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கைக்கு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ திரும்பி வந்தால், முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் அவர் இலங்கைக்கு திரும்புவார் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் வெறுப்பை சம்பாதித்து மக்களினால் நாடு தாண்டி விரட்டப்பட்ட ஒருவர் எனவும், அவருக்கு எவ்வித வரப்பிரசாதங்களும் வழங்கப்படக்கூடாதெனவும், அவ்வாறு சலுகைகள் வழங்குவதானது மக்களின் உணர்ச்சிகளை புண்படுத்தும் செயல் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்து ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் ஒருவருக்கே முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளும் வழங்கப்படவேண்டும் எனவும், நாட்டையும் மக்களையும் வறுமையின் விளிம்பிற்கு கொண்டுசென்று நாட்டை காட்டிக்கொடுத்த ஒருவருக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்படக்கூடாதென பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 150 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular