Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுடக்கப்பட்டது மேலும் சில பகுதிகள். மக்கள் பீதியில்!

முடக்கப்பட்டது மேலும் சில பகுதிகள். மக்கள் பீதியில்!

நாட்டில் உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

7 கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பொலிஸ் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் , அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் – வலப்பன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 250 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular