நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மதியம் 12 மணிவரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 24 மணிநேரத்தில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பாகங்களில், 75 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
135 total views, 1 views today