Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

திங்கட்கிழமை முதல் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையின் அடிப்படையில் விலை சூத்திரத்திற்கு அமைவாக புதிய விலைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதுவரையில் 50 சுமார் 50 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு ஏற்கனவே காணப்பட்ட ‘வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் செயலியை (Home Delivery App)’ மீண்டும் செயற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.

இதுதவிர வெளிநாடுகளிலுள்ளவர்கள், எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கையிலுள்ள தமது உறவினர்களுக்கு லிட்ரோ சிலிண்டர்களை பெற்றுக் கொடுப்பதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய வெளிநாடுகளிலுள்ளவர்கள் சிலிண்டர்களுக்கான டொலர்களை செலுத்திய பின்னர், அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனைய போட்டி நிறுவனங்களை விட குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். குறைக்கப்படும் விலைகள் திங்களன்று அறிவிக்கப்படும் என்றார்.

 187 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular