அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவைப் போன்று இலங்கையும் மீண்டும் கொவிட்-19 பரவல் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் நிலைமையிலேயே உள்ளது.
எனினும் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமலிருப்பதற்கு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் என்று விசேட வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒமிக்ரோன் தொற்றினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவே 11 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் விரைவாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
எனவே இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு சகலரும் விரைந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லை எனில் கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வது கடினமாகும் என்றார்.
121 total views, 1 views today