Thursday, July 7, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமின் துண்டிப்பு தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

மின் துண்டிப்பு தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும்(22) நாளையும், நாளை மறுதினமும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மின்சார பிரச்சினைக்குத் தீர்வுகாண, எதிர்காலத்தில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, இன்று(22) முற்பகல் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், வீதி விளக்குகளை ஒளிரச் செய்யும் காலத்தை மட்டுப்படுத்த அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

 203 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular