இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள், இரண்டரை மணிநேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அதேநேரம், P Q R S T U V W ஆகிய வலயங்களில், முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில், ஒரு மணி நேரமும்,
மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
124 total views, 1 views today