சமூக வலைத்தளங்களை தடைசெய்தமையானது மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக எவ்வித மதிப்பீடுகளும் செய்யப்படாத நிலையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டமையும் ஒரு வகை உரிமை மீறல் செயற்பாடு என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த முடக்கம் தொடர்பான தெளிவான விளக்கத்திற்கு காவல்துறைமா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களினது பங்குபற்றலுடன் இன்று இடம்பெற்ற விஷேட கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
199 total views, 1 views today