Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமனித உரிமைகள் அறிக்கையாளர் கண்டனம்!

மனித உரிமைகள் அறிக்கையாளர் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி அண்மைய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று லாலர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் நேற்று மாலை தமது தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக தெரிவித்தே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

 

 113 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular