இலங்கையை பிசாசுகளின் நாட்டை போன்று ராஜபக்ஷாக்கள் மாற்றியுள்ளனர். எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மனிதனை உண்ணும் நாடாக இலங்கை மாற்றமடையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இலங்கையில் இரசாயன உரப் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறெனில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி பொதிகளில் ‘இந்த அரிசியை உட்கொண்டால் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.