விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் செறிமானத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென அந்த அமைச்சின் செயலாளர் கே. டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயைப் பயன்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி அதிகரித்திருந்த சந்தர்ப்பங்களில் மண்ணெணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தேவைக்கு மேலதிகமான எண்ணெய் தற்போது கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் மேலும் எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே. டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.
241 total views, 1 views today