உக்ரைன் மீதான போருக்கு மேற்கத்தேய நாடுகள் தான் முக்கிய காரணம் என பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின்போது உக்ரைன் உடனான மோதல் குறித்தும், அதில் மேற்கத்தேய நாடுகளின் அழுத்தம் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்தனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் ஊடகவியலாளர்களை சந்தித்த பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மேற்கத்தேய நாடுகள்தான், ரஷ்யாவையும், பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து பெலாரஸின் ஜனாதிபதி மேலும் பேசுகையில், “ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் எங்களை உக்ரைனில் போருக்குத் தள்ளுகிறார்கள்.
இந்த பிரச்சினையில் தலையிடும் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இந்த மோதலில் பெலாரஸ் தலையிட்டால் அது, அவர்களுக்கு பரிசாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
367 total views, 1 views today