Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsபேஸ்புக் முடக்கத்தால் அதன் நிறுவனருக்கு ஏற்பட்ட நிலை!

பேஸ்புக் முடக்கத்தால் அதன் நிறுவனருக்கு ஏற்பட்ட நிலை!

சர்வதேச ரீதியில் நேற்றிரவு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் சூக்கர்பேர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளன.

அதற்கமைய, 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் சூக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கிடையில் சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளது.

 153 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular