புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் மற்றும் நாகவில்லு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களால் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் இன்று 1.05.2021 அன்பளிப்பு செய்யப்பட்டது.
புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் மேற்படி பேரீச்சம் பழங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
சமார் 1400 கிலோ கிராம் பெறுமதியான பேரீச்சம் பழங்கள் இன்று 1.05.2021 பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதுவரை இல்லாத அளவு இம்முறை நோன்பு காலத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பேரீச்சம் பழங்கள் கிடைக்கபெற்று அவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் முதற்கட்டமாக 750 கிலோ பேரீச்சம் பழங்களும், அதனை தொடர்ந்து 900 கிலோ பேரீச்சம் பழங்களும், அதனை தொடர்ந்து 1100 கிலோ பேரீச்சம் பழங்களும், பரோபகாரிகளினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கையளிப்பு நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் மற்றும் நாகவில்லு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

317 total views, 1 views today