உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண் அதிகாரிகள் மூவர் பிரதி காவல்துறைமா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி காவல்துறைமா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில், பெண் காவல்துறை அதிகாரிகள் பிரதி காவல்துறைமா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
352 total views, 1 views today