Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபெட்ரோல் வருமா வராதா?

பெட்ரோல் வருமா வராதா?

இலங்கைக்கு எதிர்வரும் 10 மற்றும் 15ஆம் திகதிகளுக்குள் வரவிருந்த பெற்றோல் தாங்கிய கப்பல்கள், தமது வருகையை உறுதிப்படுத்தவில்லை என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இந்த கப்பல், வரவில்லையெனில், எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதியன்று ஐஓசி நிறுவனத்தின் கப்பல்கள் மூலம் மாத்திரமே பெற்றோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நாணயக்கடிதம் விநியோகிக்கப்பட்டபோதும், வங்கி தரமிறக்கல் காரணமாக இந்த கப்பலை வரவழைக்கமுடியவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தநிலையில், மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதியன்று பெற்றோலை இலங்கைக்கு எடுத்து வர இணங்கியுள்ளது.

எனினும் இந்த பெற்றோல் வழமையான விலையை அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்படவுள்ளது.

எனவே அதிக விலைக்கு இந்த பெற்றோலை கொள்வனவு செய்வதா? அல்லது 22 ஆம் திகதி ஐஓசி நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெற்றோல் இல்லாமல் இருப்பதா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்று கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டார்.

இந்த கப்பலின் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக மத்திய வங்கி,டொலர் ஒதுக்கீட்டை செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இது குறித்து நாளை மறுநாள், அமைச்சின் செயலாளரை, கோப் குழுவின் முன் அழைத்து முடிவெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை கேட்டுக்கொண்டார்.

 206 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular