எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இன்று(07) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் புதிய பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பெரும்பாலும் 2022 ஆம் ஆண்டு முற்பகுதியில் குறித்த பரீட்சைகள் நடத்தப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
297 total views, 1 views today