புகையிரத பயணக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தினால் இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொடர்ச்சியான நட்டங்கள் அதிகரித்துள்ளதோடு, உரிய சேவையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், புகையிரத கட்டணங்கள் மற்றும் இதர புகையிரத  கட்டணங்கள் திருத்தப்பட வேண்டிய அவசியம் தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களில் திருத்தம் செய்யப்படாத புகையிரத கட்டணங்கள் மற்றும் கடந்த 14 ஆண்டுகளில் திருத்தப்படாத இதர புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.