இந்தப் போட்டியில் முல்டான் சுல்தான்ஸ் மற்றும் லாஹூர் காலான்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய லாஹூர் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹவிஸ் 46 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றார்.
இதை தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற என்ற வெற்றி இலக்குடன் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது .
ஆரம்ப துடுப்பாட்ட வீராக களமிறங்கிய அந்த அணியின் தலைவர் மொஹமட் ரிஸ்வான் 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சோபிக்காத நிலையில் சுல்தான் அணி 19.3 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இந்நிலையில், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லாஹூர் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் லாஹூர் அணி பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் முதல் முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது.
லாஹூர் அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
196 total views, 1 views today