பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 280 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 610,036 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 12,273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  21,909,298  ஆக அதிகரித்துள்ளது.

பிரேசில் கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 257 உயிரிழப்புகளையும் 10,502 புதிய தொற்றாளர்களையும் பதிவு செய்துள்ளது.

தென் அமெரிக்க நாட்டில் தற்போது 100,000 மக்களுக்கு 290.3 உயிரிழப்புகளும் 10,425.7 தொற்றாளர்களும் என்ற வீதத்தில் பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாவ் பாலோ மாநிலத்தில் 152,538 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் 4,415,745 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ரியோ டி ஜெனிரோவில் 68,607 உயிரிழப்புகள் மற்றும் 1,329,609 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பிரேசிலில் 156.3 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 73.28 சதவீதம்) கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

மேலும் 121.7 மில்லியன் மக்களுக்கு (57.08 சதவீதம்) முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.