பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் 216,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை வருட விசாரணைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காலை இந்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கையை தொகுத்த சுயாதீன ஆணைக்குழு 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பிரான்சில் உள்ள கத்தோலிக்க ஆயர்களால் அமைக்கப்பட்டது.
அறிக்கையை தொகுத்த சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்-மார்க் சாவே ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 80 சதவீதம் பேர் சிறுவர்கள் என்று தெரியபடுத்தினார்.
இந்த பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையானது கடந்த 1950 முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியுள்ளனர்.
197 total views, 1 views today