பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை உதித் லொகு பண்டார மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து, அதற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரிடம் நாம் வினவிய போது, குறித்த கணக்கில் உள்ள பணம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொடுப்பனவாக பெற்றுக் கொண்டதென தெரிவித்தார்.
வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை தொடர்பில் எழுந்த சந்தேகத்தையடுத்து, கணக்கை ஆய்வு செய்தபோது, கடந்த பல ஆண்டுகளாக குறித்த வங்கிக் கணக்கில் இருந்து தொடர்ந்தும் பணம் மீளப் பெறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த வங்கிக் கணக்கிற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டை உதித் லொகுபண்டார வசமிருந்ததாக தெரியவந்துள்ளது.
உதித் லொக்குபண்டார முன்னாள் சபாநாயகர் வீ.ஜே.எம். லொக்குபண்டாரவின் மகனாவார்.
246 total views, 1 views today