மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழில் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சமூகவலைத்தளங்களில் அது தொடர்பிலான தகவல்களே அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை கமல்ஹாஷன் தமிழில் தொகுத்து வழங்குகின்றார் எனபது அனைவருக்கும் தெரிந்த விடயம்.. தமிழில் மட்டுமாலாது பல மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருவதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூப்பர்ஹிட் நடிகர்களே தொகுத்து வழங்குகின்றனர்.
அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் தொடங்கபட்ட நாளில் தான், ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 15-ன்னும் தொடங்கபட்ட நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் அதனை தொகுத்து வழங்கி வருகின்றாராம்.
அந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் டாஸ்கின் போது ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர். இது பெரும் வைரலாகி வருவதுடன் என்ன நடக்கப்போகின்றது என்கின்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
235 total views, 1 views today