கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அது கொழும்பு அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட இருப்பதாக அந்த நேரத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஹரின் பெர்னாண்டோ சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிக்கலான சத்திரசிகிச்சை மேற்கொண்ட பிரபல இருதய நோய் மருத்துவர் கோட்டாபய ரணசிங்கவுக்கும் தனக்காகப் பிரார்த்தனை செய்து சமயக் காரியங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

181 total views, 1 views today