பாராளுமன்றத்தின் பல பிரிவுகளில் 3 பிரதானிகள் உட்பட மேலும் 28 ஊழியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.

அதன் பிரகாரம் இன்றைய தினமும் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற ஊழியர்கள் 112 பேர் கொவிட் இன்றைய தினம் பரிசோதனைக்கு உட்படத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களில் 28 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 28 ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கடந்த சில வாரங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்குள்ளான பாராளுமன்ற ஊழியர்களின் எண்ணிக்கை 98 வரை அதிகரித்திருக்கின்றது. அத்துடன் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 49ஆகும்.